1. Home
  2. சினிமா

கடலில் பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு கவிஞர் வைரமுத்து வரவேற்பு..!!

கடலில் பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு கவிஞர் வைரமுத்து வரவேற்பு..!!

சென்னை மெரினா கடலுக்கு நடுவே ₹81 கோடி செலவில் 'கலைஞர் பேனா நினைவுச் சின்னம்' அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. கடலுக்கு நடுவே பேனா நினைவு சின்னம் அமைக்க பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மத்திய அரசின் அனுமதிக்காக தமிழக அரசு விண்ணப்பித்திருந்தது. மத்திய சுற்றுச்சூழல், மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் வனத்துறை ஆகியவற்றிடமும் அனுமதி கோரியிருந்தது.

இந்த நிலையில் சென்னை மெரினாவில் கடலுக்கு நடுவே பேனா நினைவு சின்னம் அமைக்க மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு அனுமதி அளித்திருக்கிறது. ஏப்ரல் 17 ஆம் தேதி நடைபெற்ற மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக கூட்டத்தில் இதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. கருணாநிதியின் பிறந்த நாளான வரும் ஜூன் 3-ம் தேதி, பேனா நினைவுச் சின்னத்துக்கு அடிக்கல்நாட்ட தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு கவிஞர் வைரமுத்து வரவேற்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தமிழர்களை வான்பார்க்கச் செய்த பேனா.... கடலையே மை செய்யும் தீராத பேனா.... கடற்கரை மணலினும் பெருஞ்சொற்கள் எழுதிய பேனா.... ஒன்றிய அமைச்சகத்தின் ஒப்புதல் பெற்ற பேனா.... முதல்வரின் திறமைக்கும் பொறுமைக்கும் சாட்சி சொல்லும் பேனா.... கலைஞர் பேனா காற்றிலும் எழுதுக" என்று பதிவிட்டுள்ளார்

Trending News

Latest News

You May Like