1. Home
  2. தமிழ்நாடு

ஆர்டர் செய்தது ஐபோன்... போலி ஐபோன் ஆக மாற்றிய பலே டெலிவரி பாய்!

ஆர்டர் செய்தது ஐபோன்... போலி ஐபோன் ஆக மாற்றிய பலே டெலிவரி பாய்!

அமேசான் நிறுவன பார்சல்களை டெலிவரி செய்து வரும் நிறுவனம் மேட்ரிக்ஸ் ஃபைனான்ஸ் சொல்யூசன்ஸ். அந்நிறுவனத்தில் விநியோக நிர்வாகியாக வேலை பார்த்து வரும் லலித் என்ற இளைஞர் ஆர்டர் செய்யப்பட்ட ஐபோன்களை டெலிவரி செய்யாமல் திருடியதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார்.அந்த டெலிவரி நிறுவனத்தின் நிலைய பொறுப்பாளரான ரவி என்பவரே இதைக் கண்டறிந்து காவல்துறையிடம் புகார் அளித்திருக்கிறார்.

ஆன்லைன் தளத்தில் ஆர்டர் செய்யப்பட்ட 10 ஆப்பிள் ஐபோன்கள் மற்றும் 1 ஆப்பிள் ஏர்பாட் ஆகியவை லலித்திடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.அதனைக் கொண்டு சென்ற லலித் ஐபோன்கள் மற்றும் ஏர்பாடை திருடிவிட்டு அதற்கு மாற்றாக போலி ஐபோன்களை வைத்து பேக் செய்துள்ளார்.பின்னர், வாடிக்கையாளரை தொடர்பு கொள்ள முடியவில்லை எனக் கூறி போலி ஐபோன்கள் அடங்கிய பார்சல்களை தனது சகோதரரிடம் கொடுத்து நிறுவனத்திலேயே ஒப்படைக்கச் செய்துள்ளார்.

திரும்பி வந்த பார்சல்களை சந்தேகத்தின் பேரில் ரவி பிரித்துப் பார்க்க, உள்ளே போலி ஐபோன்கள் இருப்பதைக் கண்டு காவல்துறையிடம் புகாரளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து லலித்தின் மீது வழக்குபதிவு செய்து போலீசார் அவரைத் தேடி வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like