1. Home
  2. விளையாட்டு

பாஜக எம்.பி மீது இரண்டு பிரிவுகளில் டெல்லி போலீஸார் வழக்கு பதிவு..!!

பாஜக எம்.பி மீது இரண்டு பிரிவுகளில் டெல்லி போலீஸார் வழக்கு பதிவு..!!

மல்யுத்த பயிற்சி பெறும் மைனர் வீராங்கனைகளை, இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிட்ஜ் பூஷன் சிங் பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என்பது குற்றச்சாட்டாகும். அவரை கைது செய்ய வலியுறுத்தி மல்யுத்த வீராங்கனைகள் ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் டெல்லியில் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் மீண்டும் கடந்த 6 நாட்களாக வீரர் வீராங்கனைகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரிட்ஜ் பூஷன் பாஜக எம்.பி., என்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.


பாஜக எம்.பி மீது இரண்டு பிரிவுகளில் டெல்லி போலீஸார் வழக்கு பதிவு..!!

இதுகுறித்து 8 வீராங்கனைகள் உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தனர். இதனையடுத்து வீராங்கனைகளின் புகார்கள் மிகவும் தீவிரமானது என கூறிய உச்ச நீதிமன்றம், பிரிட்ஜ் பூஷன் மீது நடவடிக்கை எடுக்க டெல்லி காவல்துறைக்கு உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து அவர் மீது போக்சோ உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஏற்கனவே மேரி கோம் தலைமையில் 6 பேர் கொண்ட கமிட்டி விசாரணை நடத்தியது.

ஆனால் அந்த கமிட்டியின் விசாரணை அறிக்கையை விளையாட்டுத்துறை அமைச்சகம் இன்னும் வெளியிடவில்லை. இந்த சூழலில் மல்யுத்த வீரர் வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் இரவு பகலாக கடந்த 6 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பிரிட்ஜ் பூசனை கைது செய்யும் வரை தங்களது போராட்டம் தொடரும் என மல்யுத்த வீரர்கள் அறிவித்துள்ளனர்.

இது குறித்து இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் செய்தியாளர்களைச் சந்தித்த போது பேசியதாவது ","நான் நிரபராதி, எந்த விசாரணையையும் சந்திக்கத் தயார். விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்கவும் தயாராக இருக்கிறேன். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவினை நான் மதிக்கிறேன். எனக்கு நீதித்துறையின் மீது முழுமையான நம்பிக்கை இருக்கிறது.

நான் பதவி விலகுவது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. ஆனால் நான் குற்றவாளி இல்லையே. இப்போது நான் பதவி விலகினால் அவர்களின் (மல்யுத்த வீராங்கனைகளின்) குற்றச்சாட்டினை ஏற்றுக்கொண்டது போலாகி விடும். கிட்டத்தட்ட என்னுடைய பதவிக் காலம் முடிவடையும் தருவாயில் இருக்கிறது. அரசாங்கம் 3 நபர்கள் குழுவை அமைத்திருக்கிறது. இன்னும் 45 நாட்களில் தலைவருக்கான தேர்தல் நடக்க இருக்கிறது. தேர்தல் முடிந்ததும் என்னுடைய பதவிகாலம் முடிந்து விடும்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Trending News

Latest News

You May Like