இனி கோபி கதாபாத்திரத்தில் நடிக்கப்போவது இவர் தானாம்!

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் கோபி கதாபாத்திரத்தில் நடிப்பவர் சதீஷ்.அவர் அத்தொடரில் இருந்து விலக போவதாக அண்மையில் தெரிவித்திருந்தார்.இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த சீரியலாக இருக்கும் இந்த சீரியல் பல்வேறு அதிரடி திருப்பங்களுடன் ஒளிப்பரப்பாகி வருகிறது. தனது கணவர் பிரிந்து சென்ற நிலையிலும் தனி ஒரு பெண்ணாக குடும்பத்தையே தாங்கி பிடிக்கும் பாக்யாவின் கதைதான் இந்த சீரியல்
இதையடுத்து இனி கோபியாக யார் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு பாக்கியலட்சுமி தொடர் ரசிகர்களிடையே எழுந்தது.

அதன்படி, நடிகர் பப்லு கோபி கதாபாத்திரத்தில் நடிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.