1. Home
  2. தமிழ்நாடு

அண்ணாமலையுடன் எந்த தகராறும் இல்லை – ஈபிஎஸ்!!

அண்ணாமலையுடன் எந்த தகராறும் இல்லை – ஈபிஎஸ்!!

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையுடன் எந்த தகராறும் இல்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளராக தேர்வானபிறகு முதல் முறையாக எடப்பாடி பழனிசாமி நேற்று டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். அப்போது பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, அதிமுக - பாஜக கூட்டணி தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது என தெரிவித்தார். மேலும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையுடன் எந்த தகராறும் இல்லை என கூறினார்.



சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் அதிமுக மற்றும் பாஜகவினர் மாறி மாறி விமர்சனம் செய்து கொண்டிருந்தது அனைவரும் அறிந்ததே. ஆனால், தற்போது அதற்கு அப்படியே மாறாக ஈபிஎஸ் பேசியிருப்பதால் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, அதிமுக தங்களிடம் தான் உள்ளது என தெரிவித்தார். பிடிஆர் ஆடியோ குறித்து பேசிய அவர், அவர் பேசியது உண்மையாக இருந்தால் அது நிச்சயம் ஆபத்தானது என்று கூறினார்.

newstm.in

Trending News

Latest News

You May Like