1. Home
  2. தமிழ்நாடு

தனியார் பள்ளிகளில் படிப்போருக்கு மாற்று சான்றிதழ் தர தடை விதிப்பு..!!

தனியார் பள்ளிகளில் படிப்போருக்கு மாற்று சான்றிதழ் தர தடை விதிப்பு..!!

புதுச்சேரியில் பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி சதவீதம் குறையக்கூடாது என்பதற்காக புதுச்சேரியில் சில தனியார் பள்ளிகள் சுமாராக படிக்கும் 9 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களை ஏதாவது காரணம் கூறி பள்ளியில் இருந்து நீக்கத் தொடங்கியதாக புகார்கள் வந்தன. இவ்விவகாரம் கல்வித் துறைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்நிலையில் பள்ளிக் கல்வி துறை இயக்குனர் பிரியதர்ஷினி வெளியிட்ட உத்தரவில்., "புதுச்சேரியில் 9, 10, 11,12 ஆகிய வகுப்புகளில் படிக்கும் மாணவர்களின் கல்வித்தரம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததால், மாணவர்களின் பெற்றோரை மாற்றுச் சான்றிதழ் பெறச் சில தனியார் பள்ளிகள் வற்புறுத்துவது பள்ளிக் கல்வி இயக்குநரகத்தின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.

எனவே, அனைத்து தனியார் பள்ளிகளில் 9, 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு இடமாறுதல் சான்றிதழ் வழங்க வேண்டாம். தவிர்க்க முடியாத பட்சத்தில், இடமாறுதல் சான்றிதழ் வழங்க சம்பந்தப்பட்ட ஆய்வு அதிகாரிகளிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்று பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இவ்வுத்தரவு அனைத்து தனியார் பள்ளிகள் மற்றும் கல்வித்துறை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like