ரேஷன் அட்டைதாரர்களுக்கு அதிர்ச்சி செய்தி!
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் அரிசி, சர்க்கரை, பாமாயில், கோதுமை, மண்ணெண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மலிவு விலையில் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.
இந்த நிலையில், நாட்டில் மண்ணெண்ணெய் பயன்பாட்டை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக, ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தமிழ்நாட்டின் மொத்த தேவையில் 7 சதவிகிதம் மட்டுமே மத்திய அரசால் மாநிலத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ரேசன் அட்டைதாரர்களுக்கு மண்ணெண்ணெய் வழங்கும் அளவு குறித்து விளம்பரப்படுத்தும்படி திருவாரூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் ரேஷன் கடைகளில் 'முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை' என்ற அடிப்படையில் இலவச ரேஷன் விநியோகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி அரிசி, கோதுமை, தினை ஆகியவை முதலில் வருபவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும். தாமதமாக வருபவர்களுக்கு அரிசி மற்றும் கோதுமை மட்டுமே வழங்கப்படும். ஒவ்வொரு மாதமும் 13ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை ரேஷன் விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.