"சாட்டை" நாயகன் சமுத்திரகனிக்கு இன்று பிறந்தநாள்..!!

இயக்குநர், கதாநாயகன், நகைச்சுவை நடிகர், உறுதுணை கதாபாத்திரம், வில்லன் என பல முகங்களில் நடிப்பில் ஒரு சமுத்திரமாய் திகழும் நடிகர் சமுத்திரகனி இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார்.
1973ஆம் ஆண்டு ராஜபாளையத்தில் பிறந்த அவர், தமிழ் திரையுலகின் தவிர்க்க முடியாக நடிகராகவும், இயக்குநராகவும் உள்ளார். கே.பாலச்சந்தருடன் உதவி இயக்குநராக திரைப்பயணத்தை தொடங்கிய அவர், சுப்பிரமணியபுரம் படம் மூலம் புகழ் பெற்றார். சாட்டை, வேலையில்லா பட்டதாரி, ரஜினி முருகன், விசாரணை, நிமிர், காலா, வடசென்னை, ஆர்ஆர்ஆர், துணிவு உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
Also Read - #BREAKING : மயிலாடுதுறை கலெக்டர் மாற்றம்..!
தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார். உன்னை சரணடைந்தேன், நாடோடிகள், அப்பா உள்ளிட்ட படங்களின் இயக்குநராகவும் அசத்தியிருக்கிறார்.