1. Home
  2. தமிழ்நாடு

விஏஓ வெட்டிக்கொலை – நிவாரணம் அறிவித்தார் முதலமைச்சர்!!

விஏஓ வெட்டிக்கொலை – நிவாரணம் அறிவித்தார் முதலமைச்சர்!!

பணியிலிருந்தபோது தாக்கப்பட்டு மரணமடைந்த தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் அவர்களின் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி மற்றும் கருணை அடிப்படையில் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

முறப்பநாடு அருகே கோவில்பத்து கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வந்த லூர்து பிரான்சிஸ் என்பவர் இன்று மர்ம நபர்களால் அலுவலகத்தில் வைத்து சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.

ரத்த வெள்ளத்தில் மிதந்த அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.


விஏஓ வெட்டிக்கொலை – நிவாரணம் அறிவித்தார் முதலமைச்சர்!!

முதல் கட்ட விசாரணையில் மணல் கடத்தலை தடுத்த காரணத்திற்காக விஏஓ., லூர்து பிரான்சி கொல்லப்பட்டது தெரியவந்தது. இது குறித்து போலீசார் ஒருவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், லூர்து பிரான்சிஸ் அவர்களின் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி மற்றும் கருணை அடிப்படையில் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.


newstm.in

Trending News

Latest News

You May Like