1. Home
  2. தமிழ்நாடு

உஷார்! யூடியூப்-ஐ லைக் செய்தால் சம்பளம் என மோசடி!!

உஷார்! யூடியூப்-ஐ லைக் செய்தால் சம்பளம் என மோசடி!!

யூடியூப் வீடியோவை லைக் செய்தால், சப்ஸ்கிரைப் செய்தால் பணம் கொடுக்கப்படும் என்று தற்போது அதிக அளவில் ஏமாற்று வேலை நடக்கிறது.

முதலில் டெலிகிராம் அல்லது வாட்ஸ் அப்பில் யூடியூப் வீடியோக்களை லைக் செய்வதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்று தொடர்பு கொள்வர். அவ்வாறே சில வீடியோக்களை லைக் செய்த பின்னர், பகுதி நேர வேலை அல்லது சிறிய அளவிலான முதலீடு செய்து பெரும் லாபம் அடையலாம் என்று ஆசை காட்டுவார்கள்.

அதை உண்மை என்று எண்ணி தொடர்ச்சியாக பேசும் பொது ஒரு போலி வெப்சைட்டை கொடுத்து லாகின் செய்ய சொல்லி முதலில் சிறிய அளவில் பணத்தைக் கட்ட சொல்வார்கள். முதலில் லாபமாக சில ஆயிரங்களில் பணம் திரும்ப கிடைக்கும்.


உஷார்! யூடியூப்-ஐ லைக் செய்தால் சம்பளம் என மோசடி!!


பின்னர் அதிக அளவில் பணத்தை பொதுமக்கள் செலுத்திய பிறகு, அதற்கேற்றார் போல் பெரிய தொகை அந்த வெப்சைட்டில் காட்டப்படும். ஒரு கட்டத்தில் வெப்சைட்டில் காண்பிக்கப்படும் பணத்தை எடுக்க முயலும் போது, பல்வேறு கட்டணங்கள் விதிக்கப்படும்.

பணம் கட்ட தவறும் பட்சத்தில் அக்கவுண்ட் க்ளோஸ் ஆகிவிடும் என்றும் பயமுறுத்துவர். திரும்பத் திரும்ப அவர்கள் கேட்கும் பணத்தை கட்டினாலும் கூட ஒருபோதும் பொதுமக்களுக்கு அவர்களுடைய பணம் வந்து சேராது.

சில நாட்களில் வெப்சைட்டை டவுன் செய்துவிட்டு மொத்தமாக தடயங்களையும் அழித்து விடுவர். மும்பையை சேர்ந்த பெண் ஒருவரை தொடர்பு கொண்ட மர்ம கும்பல் இப்படித்தான் ஏமாற்றியுள்ளது.


உஷார்! யூடியூப்-ஐ லைக் செய்தால் சம்பளம் என மோசடி!!


அவருக்கு வீட்டில் இருந்தே ஈசியாக வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளனர். அதனை நம்பிய அந்த பெண்ணும் அவர்களுடன் பேசி வந்துள்ளார். தொடர்ந்து சில குறிப்பிட்ட யூடியூப் சேனல்களை சப்ஸ்கிரைப் செய்தால் சம்பதிக்கலாம் என்று கூறியதை அவரும் நம்பியுள்ளார்.

தொடர்ந்து தங்கள் வேலைக்கு பணம் தருவதாக கூறி வங்கி விவரங்களை அந்த பெண்ணிடம் கேட்க, அவரும் கொடுத்துள்ளார். பின்னர் தொடர்ந்து அவர்கள் கேட்க கேட்க விவரங்களை இந்த பெண்ணும் கூறி, அவரது வங்கி கணக்கில் இருந்து சுமார் ரூ.7.5 லட்சத்திற்கும் மேல் அந்த மர்ம கும்பல் எடுத்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அந்த பெண் இதுகுறித்து சைபர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் இதுக்குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like