1. Home
  2. தமிழ்நாடு

கொடூரம்! காதலி மீது சூடான எண்ணெய் ஊற்றிய காதலன்!!

கொடூரம்! காதலி மீது சூடான எண்ணெய் ஊற்றிய காதலன்!!

நெருக்கமாக இருக்க வற்புறுத்தி காதலி மீது காதலன் சூடனா எண்ணெய்யை ஊற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் ஏலூர் பகுதியை சேர்ந்த 24 வயது இளம்பெண் அப்பகுதியில் உள்ள பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார். அவரும், அதே பகுதியை சேர்ந்த அனுதீப் என்ற இளைஞரும் 5 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.

இருவரும் அடிக்கடி வெளியே சுற்றுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். அந்த வகையில், கடந்த 9ஆம் தேதி இருவரும் வேளாங்கண்ணி வந்துள்ளனர். மறுநாள் புறப்பட்டு ஆந்திராவில் உள்ள பெடவேகி என்ற இடத்திற்கு சென்றனர்.


கொடூரம்! காதலி மீது சூடான எண்ணெய் ஊற்றிய காதலன்!!


அப்போது, அனுதீப் தன்னுடன் நெருக்கமாக இருக்குமாறு பெண்ணை வற்புறுத்தியுள்ளார். ஆனால் அப்பெண் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். அனுதீப் தொடர்ந்து தொல்லை கொடுக்கவே பெண் அங்கிருந்து புறப்பட முயன்றுள்ளார்.

இதையடுத்து அனுதீப் அந்த பெண்ணை அடித்து துன்புறுத்தி அதே வீட்டில் அடைத்து வைத்துள்ளார். மேலும் அவர் மீது சூடான எண்ணையை ஊற்றி கொடுமை செய்துள்ளார். சுமார் 10 நாட்கள் இதுபோன்று கொடுமை படுத்தியுள்ளார்.


கொடூரம்! காதலி மீது சூடான எண்ணெய் ஊற்றிய காதலன்!!

இந்நிலையில், அந்த வீட்டில் இருந்து தப்பிய அப்பெண் காவல் நிலையம் சென்று காதலன் மீது புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் அனுதீப்பை தீவிரமாக தேடி வருகின்றனர்.

அந்த பெண் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like