புடவைக்காக முடியை பிடித்து சண்டை போட்டுக்கொண்ட பெண்கள்!!

புடவைக்காக பெண்கள் முடியை பிடித்து சண்டை போட்டுக் கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பெங்களூரு நகரில் மல்லேஷ்வரம் என்ற பகுதியில் ஜவுளி கடை செயல்பட்டு வருகிறது. வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக அந்த கடையில் ஆண்டுதோறும் குறைந்த விலையில் புடவைகள் விற்கப்படுவது வழக்கம்.
எனவே புடவை எடுக்க பெண்கள் கடையில் குவிந்து விட்டனர். அப்போது, இரு பெண்களுக்கு இடையே புடவை எடுப்பதில் தகராறு ஏற்பட்டது. ஒருவர் தலைமுடியை பிடித்து அடித்து மற்றொரு பெண் தாக்குதலில் ஈடுபட்டார்.

அடிவாங்கிய பெண் பதிலுக்கு துவைத்து, எடுத்து விட்டார். இதனை கடைக்கு வந்திருந்த பெண்கள் அச்சத்துடன் பார்த்து கொண்டிருந்தனர். ஆனால், இந்த ரணகளத்திலும், சிலர் கடையில் புடவைகளை தேர்வு செய்து கொண்டிருந்தது கொடுமை.
பெண்கள் இருவரும் கொடூரமாக சண்டை போட்டுக் கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. மனிதனுக்கு எத்தனையோ பிரச்னை இருக்கையில் இதுவெல்லாம் ஒரு பிரச்னையா என்று நெட்டிசன்கள் வீடியோவுக்கு கீழே கமென்ட் செய்து வருகின்றனர்.
newstm.in