பின்வாங்கினார் எடப்பாடி பழனிசாமி!!

கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் மனு தாக்கல் செய்திருந்த எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளர் அவரது வேட்புமனுவை திரும்பப் பெற்றார்.
அடுத்த மாதம் 10ஆம் தேதி நடைபெற உள்ள கர்நாடகா சட்டமன்ற தேர்தலில், அதிமுக சார்பில் புலிகேசி நகர் தொகுதியில் போட்டியிட எடப்பாடி பழனிசாமி ஆதரவுடன் அன்பரசன் வேட்புமனு தாக்கல் செய்தார்.
இதேபோல், ஓபிஎஸ் தரப்பில், புலிகேசி நகர், கோலார் தங்கவயல் மற்றும் காந்திநகர் ஆகிய தொகுதிகளில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருந்தனர். பரிசீலனையின்போது ஈபிஎஸ் ஆதரவு வேட்பாளரின் மனு ஏற்கப்பட்டது.

அந்த தொகுதியில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் நெடுஞ்செழியனின் மனு நிராகரிக்கப்பட்டது. எனினும் காந்திநகர் தொகுதியில் ஓபிஎஸ் ஆதரவுடன் மனு தாக்கல் செய்த குமார் என்பவர் மனு அதிமுக வேட்பாளராக ஏற்றுக் கொள்ளப்பட்டார்.
கோலார் தங்கவயல் தொகுதியில் ஆனந்தராஜ் என்பவரின் மனு சுயேச்சையாகவும், ஏற்கப்பட்டது. ஓ.பன்னீர் செல்வம் தரப்பு வேட்பாளரை அ.தி.மு.க வேட்பாளராக ஏற்றுக்கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈபிஎஸ் சார்பில் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதப்பட்டது.

இந்நிலையில், புலிகேசி தொகுதியில் அ.தி.மு.க சார்பில் களமிறங்கிய அன்பரசன் வேட்பு மனுவைத் திரும்பப் பெற்றார். பா.ஜ.க மேலிடப் பொறுப்பாளர்கள் எடப்பாடி பழனிசாமியைத் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டனர்.
அப்போது, கர்நாடகா மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலில் புலிநகர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ள அன்பரசன் வேட்புமனுவை திரும்ப பெறவேண்டும் என்று கேட்டுக்கொண்டதால், வாபஸ் பெறப்பட்டுள்ளது.
newstm.in