1. Home
  2. விளையாட்டு

இந்த இடத்தை விட்டு போக மாட்டோம்... மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் !!

இந்த இடத்தை விட்டு போக மாட்டோம்... மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் !!

மல்யுத்த சங்கத்தின் தலைவரும், பாஜக எம்.பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிராக பாலியல் புகாரை முன்வைத்து கடந்த ஜனவரியில் போராட்டத்தில் ஈடுபட்டனர் மல்யுத்த வீரர்கள்.அப்போது பிரிஜ் பூஷன் சரண் சிங் பதவி விலகவேண்டும் எனவும் அப்போது கோரிக்கை வைத்தனர். இந்த பாலியல் புகார் தொடர்பாக விசாரிக்க 7 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு நியமித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. ஆனால், 3 மாதங்களாகியும் இந்த விவகாரத்தில் எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது.

இந்த நிலையில், பாஜக எம்.பி பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிராக கடந்த 21ஆம் தேதியன்று கன்னாட் பிளேஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் மீது நேற்று வரையில் போலீசார் வழக்குப் பதிவு செய்யாமல் கிடப்பில் போட்டுள்ளனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த மல்யுத்த வீரர், வீராங்கனைகள், பிரிஜ் பூஷனை கைது செய்யும்படி வலியுறுத்தியும், வழக்குப் பதிவு செய்யாத போலீசாரை கண்டித்தும் ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர்கள், வீராகங்கனைகள் நேற்று திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தங்களுக்கு வாக்குறுதி அளித்து 3 மாதங்களாகியும் இன்று வரையில் பாஜ எம்.பி பிரிஜ் பூஷன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தொடர்பாக, விளையாட்டு அமைச்சகம் போன்றவற்றை தொடர்பு கொண்ட போதிலும் பதில் கூறப்படவில்லை.

இதனால், எங்களுக்கு நீதி கிடைக்கும் வரையில் போராட்டம் நடத்த உள்ளோம். இந்த இடத்தை விட்டு போக மாட்டோம். பூஷன் கைது செய்யப்படும் வரையில் இங்கேயே தங்கி போராட்டம் நடத்துவோம், என்று அறிவித்தனர். இதனால் தலைநகர் டெல்லியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.

ஒலிம்பிக் பதக்கம் வென்ற சாக்‌ஷி மாலிக் மற்றும் 2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வினேஷ் போகட் உள்ளிட்ட பல முன்னணி மல்யுத்த வீரர்கள், வீராங்கனையில் டெல்லியில் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது

Trending News

Latest News

You May Like