1. Home
  2. தமிழ்நாடு

பிரபல பாப் பாடகர் மூன்பின திடீர் மரணம்..!! ரசிகர்கள் அதிர்ச்சி..!!

பிரபல பாப் பாடகர் மூன்பின திடீர் மரணம்..!! ரசிகர்கள் அதிர்ச்சி..!!

தென்கொரியாவை சேர்ந்தவர் பிரபல பாப் இசை பாடகர் மூன்பின். ஆரம்பத்தில் மாடல், நடிகராக இருந்த மூன்பின், பின்னர் தென்கொரியாவின் அஸ்ட்ரோ இசைக் குழுவின் உறுப்பினராகவும் இருந்தார். அதனைத் தொடர்ந்து சமீப ஆண்டுகளாக மூன்பின் சன்ஹா இசைக் குழுவில் இருந்து வந்தார்.

25 வயதான மூன்பின் தென்கொரிய தலைநகர் சியோலில் உள்ள அவரது அடுக்குமாடி குடியிருப்பில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். மூன்பின்னின் மரணம் தென்கொரிய பாப் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மூன்பின் தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தென் கொரிய பாப் நட்சத்திரங்களின் மரணங்கள் கடந்த சில ஆண்டுகளாகவே அதிகரித்து வருகின்றன. பிரபல பாடகர்கள் சுல்லி, கோ ஹாரா, ஜோ யுன் ஆகியோர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், தற்போது மூன்பின் மரணம் ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூன்பின் மரணத்துக்கு பல்வேறு இடங்களில் ரசிகர்கள் தங்களது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like

News Hub