1. Home
  2. சினிமா

சம்பள போட்டியில் நயன், சமந்தா, ராஷ்மிகாவை பின்னால் தள்ளிய மிருணாள் தாகூர்!

சம்பள போட்டியில் நயன், சமந்தா, ராஷ்மிகாவை பின்னால் தள்ளிய மிருணாள் தாகூர்!

‘சீதா ராமம்’ பட நடிகை மிருணாள் தாகூர் , அந்த படத்தின் வெற்றிக்கு பின் தற்போது கமிட் ஆகியுள்ள புதிய படத்தில் 2 மடங்கு சம்பளத்தை ஏற்றியுள்ளது, முன்னணி நடிகைகளுக்கு ஷாக் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

மிருணாள் தாகூர், முதன் முதலில் மராத்தி திரைப்படத்தின் மூலம் தான் திரையுலகில் அறிமுகமானார். சில ஹிந்தி சீரியல்களிலும் நடித்துள்ளார். இவரின் திறமையான நடிப்பை பார்த்து வியந்து, இவரை பாலிவுட் இயக்குனர் டப்ரீஸ் நூரானி என்பவர், தான் இயக்கிய லவ் சோனியா படத்தில் அறிமுகப்படுத்தினார்.

முதல் படத்திலேயே இவருடைய நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்கள் கிடைத்ததால், அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது.

இந்நிலையில் கடந்த ஆண்டு, மிருணாள் தாகூர் நடிகர் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக ‘சீதா ராமம்’ படத்தில் நடித்தார். இந்த படத்தில் இவரின் நடிப்பு மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. திரைப்பட விமர்சகர்கள் பலரும், இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் மிருணாள் தாகூரின் நடிப்பு என புகழ்ந்து தள்ளினர்.

அதன் விளைவாக தற்போது புகழின் உச்சியில் இருக்கும் மிருணாள், இப்போது சம்பாதித்தால் தான் உண்டு என தயாரிப்பாளர்களிடம் கதையை கேட்பதற்கு முன் சம்பளத்தை கோடியில் தருவீர்களா என்று தான் கேட்கிறாராம்.

Trending News

Latest News

You May Like