1. Home
  2. சினிமா

பிரபல காமெடி நடிகர் மாரடைப்பால் மரணம்!!

பிரபல காமெடி நடிகர் மாரடைப்பால் மரணம்!!

பிரபல காமெடி நடிகர் அல்லு ரமேஷ் (52) மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2001ஆம் ஆண்டு வெளியான சிருஜல்லு என்ற தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் அல்லு ரமேஷ். இவர் தெலுங்கு படங்களில் காமெடி வேடங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர்.

தொலு பொம்மலதா, மதுரை வைன்ஸ், வீதி உட்பட பல படங்களில் இவர் நடித்துள்ளார். இவர் விசாகப்பட்டினத்தில் உள்ள தனது இல்லத்தில் இருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.


பிரபல காமெடி நடிகர் மாரடைப்பால் மரணம்!!

இவரது மறைவு ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். அல்லு ரமேஷின் ரசிகர்களும், திரைத்துறை நண்பர்களும் உருக்கமாக தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like