1. Home
  2. சினிமா

மாதவன் மகனை பாராட்டி வாழ்த்து சொல்லிய ஆஸ்கர் நாயகன் ..!!


நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் கோலாலம்பூரில் நடைபெற்ற ‘மலேசியா இன்விடேஷனல் ஏஜ் குரூப் ஸ்விம்மிங் சாம்பியன்ஷிப்‘ போட்டியில் 50, 100, 200, 400 மற்றும் 1500 மீட்டர் போட்டியில், 5 தங்கப் பதக்கங்களை வென்றார். அவருக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான், “அவரை (வேதாந்த்) வளர்க்கவும், நீங்கள் (மாதவன்) எடுத்த சரியான முடிவுகளுக்கும், தியாகத்திற்கும் உங்களுக்கும், உங்கள் மனைவிக்கும் அந்த பெருமை சாரும்“ எனப் பாராட்டியுள்ளார்.



அதற்கு நன்றி தெரிவித்த மாதவன், “ ஓ….. மிக்க நன்றி சார், எங்களுக்கும் குறிப்பாக வேதாந்திற்கும் உங்களிடமிருந்து கிடைக்கும் இந்த வாழ்த்து ஊக்கமளிக்கும், மிகவும் தொட்டுவிட்டீர்கள் ரஹ்மான் சார், கடவுளின் அருள்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.



Trending News

Latest News

You May Like

News Hub