1. Home
  2. சினிமா

வைரலாகும் தங்கலான் மேக்கிங் வீடியோ..!!

வைரலாகும் தங்கலான் மேக்கிங் வீடியோ..!!

பிரபல இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘தங்கலான்’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பதும் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக கே.இ.ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். கே.ஜி.எஃப்-ஐ மையமாக வைத்து வரலாற்று கதையம்சம் கொண்ட படமாக தங்கலான் உருவாகி வருகிறது. தங்கலான் திரைப்படத்தை 3டி தொழில்நுட்பத்தில் படமாக்கி வருகின்றனர். இப்படத்தில் மலையாள நடிகை பார்வதி, மாஸ்டர் பட நாயகி மாளவிகா மோகனன், நடிகர் பசுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் சியான் விக்ரம் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அவர் நடித்து வரும் ‘தங்கலான்’ படத்தின் வேற லெவல் மேக்கிங் வீடியோவை இயக்குனர் பா ரஞ்சித் வெளியீட்டு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.



Trending News

Latest News

You May Like