ஜவான் படத்தின் பாடல் காட்சி இணையத்தில் கசிந்தது..!!

டைரக்டர் அட்லீ பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் ஷாருக்கானுடன் நயன்தாரா நாயகியாக நடிக்கிறார்.கடந்த ஒரு வருடமாக இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இப்படத்தின் பாடல் காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இது ஒட்டுமொத்த படக்குழுவையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இப்பாடல் சொகுசு கப்பலில் படமாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான வீடியோவில், நயன்தாராவும், ஷாருக்கானும், பாடலுக்கு நடனமாடுவதைக் காணலாம். பராக் கான் நடன இயக்குனராக பணிபுரிந்து உள்ளதாகவும், அர்ஜித் சிங் என்பவர் இந்த பாடலை பாடியுள்ளார் என்றும் அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் படப்பிடிப்பு நடந்து வருகிறது, இதனால் அட்லீயும் ஷாருக்கானும் அதிர்ச்சியில் உள்ளனர். சம்பவங்கள் நடக்கும். இந்த வீடியோவை யாரும் சமூக வலைதளங்களில் பகிர வேண்டாம் என படக்குழுவினர் கேட்டுக் கொண்டு உள்ளனர்.
தற்போது படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைந்து, ரிலீஸ் தேதி, டீசர், டிரைலர் போன்ற அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஷாருக்கான் மற்றும் நயன்தாரா நடிக்கும் ஒரு பாடல் காட்சி வீடியோ கசிந்துள்ளது.