1. Home
  2. சினிமா

அடையாளம் தெரியாமல் போன பிரபல தமிழ் நடிகர்..!!

அடையாளம் தெரியாமல் போன பிரபல தமிழ் நடிகர்..!!

பிரபல நகைச்சுவை நடிகராக இருப்பவர் ரோபோ சங்கர். இவர் முதலில் மிமிக்ரி கலைஞராக தனது பயணத்தை ஆரம்பித்து அதன் பின் கலக்கபோவது யாரு, அசத்தப் போவது யாரு, அது இது எது போன்ற நிகழ்ச்சிகளில் பல குரலில் பேசி அசத்தியதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

அதன்பின்னர் திரையுலகிலும் அடியெடுத்து வைத்த ரோபோ சங்கர்.ஆரம்பத்தில் சினிமா உலகில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் ரோபோ ஷங்கர். அதன் பின்னர் இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் என்று பல்வேறு நடிகர்களின் படத்தில் காமெடியனாக நடித்து இருக்கிறார்.இதனிடையே 2002 ஆம் ஆண்டு நடிகர் ரோபோ ஷங்கர் அவர்கள் பிரியங்கா என்ற ஒரு நடன கலைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் இருவருக்கும் இரண்டு மகள்கள் உள்ளனர். அதில் ஒரு மகள் சமீபத்தில் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் படத்தில் நடித்து இருந்தார். சமீபத்தில் வெளிவந்த விருமன் படத்திலும் இவர் நடித்து இருக்கிறார்.

இந்நிலையில் நேற்று தமிழ் புத்தாண்டு முன்னிட்டு ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா தனது சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் ரோபோ சங்கர் மிகவும் உடல்எடை குறைந்து வேஷ்டி சட்டையுடன் ஒல்லியாக உள்ளார். இந்த புகைப்படங்களை பாரத்த ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர். இந்த போட்டோஸ் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.



Trending News

Latest News

You May Like