1. Home
  2. தமிழ்நாடு

பிரதமருக்கு ஜம்மு காஷ்மீர் சிறுமி விடுத்த கோரிக்கை!!

பிரதமருக்கு ஜம்மு காஷ்மீர் சிறுமி விடுத்த கோரிக்கை!!

நல்ல பள்ளிக்கூடம் கட்டித்தர வேண்டும் என ஜம்மு காஷ்மீர் சிறுமி ஒருவர் பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்திருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கத்துவா மாவட்டம் லோஹே-மல்ஹர் கிராமத்தை சேர்ந்த சிரத் நாஸ் என்ற சிறுமி பேசிய வீடியோதான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் சிறுமி தனது பள்ளிக்கூடத்தை சுற்றி காண்பிக்கிறார்.

பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லை என்று கூறும் அவர், தரை அழுக்காக என்றும், தங்களை இங்கேதான் உட்கார வைக்கிறார்கள் என்று வருத்தத்துடன் கூறினார். கடந்த 5 ஆண்டுகளாக பள்ளி கட்டடம் அசுத்தமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.


பிரதமருக்கு ஜம்மு காஷ்மீர் சிறுமி விடுத்த கோரிக்கை!!

எனவே எங்களுக்காக ஒரு நல்ல பள்ளியை கட்டித்தர வேண்டும் என்று சிறுமி பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். தயவுசெய்து என் விருப்பத்தை நிறைவேற்றுங்கள் என சிறுமி சிரத் நாஸ் கூறியுள்ளார்.

நீங்கள் ஒட்டுமொத்த தேசம் சொல்வதையும் கேட்கிறீர்கள். தயவு செய்து நான் சொல்வதைக் கேட்டு எங்களுக்கு ஒரு நல்ல பள்ளியை உருவாக்குங்கள். அப்போது இன்னும் ந நன்றாக படிப்போம் என தெரிவித்துள்ளார்.

நல்ல பள்ளிக்கூடம் கட்டித்தர வேண்டும் என பிரமதர் மோடிக்கு சிறுமி கோரிக்கை விடுத்திருப்பது அனைவர் மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



newstm.in

Trending News

Latest News

You May Like