1. Home
  2. தமிழ்நாடு

இது தெரியுமா ? ட்விட்டரில் புதிய அம்சம் அறிமுகம்..!!

இது தெரியுமா ? ட்விட்டரில் புதிய அம்சம் அறிமுகம்..!!

மனதில் பட்ட கருத்துகளை சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் சமூக வலைதளமாக விளங்குகிறது டுவிட்டர் தளம். பயனர்கள் வழக்கமாக இதில் 280 கேரக்டர்களில் டுவிட் செய்ய முடியும். ‘டுவிட்டர் ப்ளூ’ சந்தா கட்டணம் செலுத்தி வரும் பயனர்கள் சுமார் 4,000 கேரக்டர்களில் டுவிட் செய்ய முடியும். இந்நிலையில், 10,000 கேரக்டர்களில் டுவிட் செய்யும் புதிய அம்சம் இப்போது அறிமுகமாகி உள்ளது. மேலும், இந்த டுவிட்டை பதிவு செய்த முதல் 30 நிமிடங்களுக்குள் எடிட் செய்யும் வசதி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

கடந்த ஆண்டு எலான் மஸ்க் டுவிட்டர் தளத்தை வாங்கி இருந்தார். அது முதலே புதுப்புது அப்டேட்களை அவர் கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் ஆட்குறைப்பு நடவடிக்கையை அவர் கடைபிடித்து வருகிறார். இந்த சூழலில் இந்த புதிய அம்சம் அறிமுகமாகி உள்ளது.

இப்போதைக்கு இது ‘டுவிட்டர் ப்ளூ’ பயனர்களின் பயன்பாட்டுக்கு மட்டுமே கிடைக்கும் என தெரிகிறது. இவர்கள் ப்ளூ டிக் பெற்ற பயனர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like