1. Home
  2. விளையாட்டு

அடுத்த போட்டியில் தோனி விளையாடுவாரா ? - சி.எஸ்.கே. சிஇஓ முக்கிய தகவல்..!!

அடுத்த போட்டியில் தோனி விளையாடுவாரா ? - சி.எஸ்.கே. சிஇஓ முக்கிய தகவல்..!!

சென்னை அணியில் ஏற்கனவே தீபக் சாஹர் ஆகியோர் காயம் ஏற்பட்டு போட்டிகளில் விளையாடாத நிலையில் , தற்போது கேப்டன் தோனி, சிசண்டா மகலா , சிமர்ஜீத் சிங் உள்ளிட்டோர் காயமடைந்துள்ளனர் . சென்னை அணியின் முக்கிய வீரர்கள் காயம் அடைந்திருப்பது சென்னை ரசிகர்களிடையியே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் தோனி அடுத்த போட்டியில் விளையாடுவாரா என்ற கேள்விக்கு சென்னை அணி சிஇஓ காசி விஸ்வநாதன் பதில் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது , அவருக்கு முழங்காலில் காயம் இருப்பது உண்மை தான். ஆனாலும் அவர் தொடர்ந்து விளையாடுவார்" என தெரிவித்துள்ளார்.

மேலும், பென் ஸ்டோக்ஸ் வேகமாக குணமடைந்து வருகிறார், ஏப்ரல் 30 ஆம் தேதி பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கண்டிப்பாக உடல் தகுதியுடன் இருப்பார் என தெரிவித்தார்.


Trending News

Latest News

You May Like

News Hub