சோகத்தில் திரையுலகம்..!! பரிதாபமான நிலையில் அஜித் பட இயக்குனர்..!!

அஜித்தின் நண்பரும் பிரபல தயாரிப்பாளர் ஒருவருக்கு நேர்ந்த சோகத்தால் மொத்த திரைபிரபலங்களும் கவலையில் உள்ளது. நடிகர் அஜித்தின் ஆரம்பக்கால படங்கள் தோல்வியானதையடுத்து, இவரை வைத்து படம் பண்ண பல தயாரிப்பாளர்கள் தயங்கினார்கள். அந்த சமயத்தில் அஜித்தின் நடிப்பில் 1997 ஆம் ஆண்டு வெளியான ராசி படத்தை தயாரித்தவர் தான் தயாரிப்பாளர் எஸ்.எஸ். சக்கரவர்த்தி.
Also Read - டெல்லி முதல்வர் ஆகிறார் ரேகா குப்தா..!
இப்படத்தை தொடர்ந்து அஜித்தின் வாலி, முகவரி, சிட்டிசன், ரெட், வில்லன், ஆஞ்சநேயா, ஜீ, வரலாறு உள்ளிட்ட படங்களை தனது நிக் ஆர்ட்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலமாக எஸ்.எஸ் சக்ரவர்த்தி தயாரித்தார். இவர் தயாரிப்பில் அஜித் நடித்த அத்தனை படங்களும் ஹிட்டான நிலையில், இருவரும் நல்ல நண்பர்களாக வலம் வந்தனர். இந்நிலையில் தயாரிப்பாளர் எஸ்.எஸ்.சக்ரவர்த்திக்கு தற்போது புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.அதற்கு உரிய சிகிச்சைகளை பெற்று வருவதாக சினிமா வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த செய்தி சினிமா உலகில் பலரையும் கவலை அடையச் செய்துள்ளது.
சில வாரங்களுக்கு முன்பு தான் அவருடைய தந்தை மரணம் அடைந்துள்ளார். அந்த துயரம் மறைவதற்குள் எஸ்.எஸ். சக்கரவர்த்திக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. அஜித்தின் திரைவாழ்க்கைக்கு பெரும் அச்சாரம் போட்டவர் அவர் தான். ஆனால் அவருடைய பரிதாப நிலை பலரையும் கலக்கமடையச் செய்துள்ளது.