பஞ்சாப் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த வீரர்களில் இருவர் தமிழர்கள்!!
பஞ்சாப் ராணுவ முகாமில் நடந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 4 வீரர்களில், இரண்டு பேர் தமிழர்கள் என தெரியவந்துள்ளது.
பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் நேற்று அதிகாலை நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். அவர்கள் பீரங்கி படைப்பிரிவை சேர்ந்த சாகர் பன்னே (25), கமலேஷ் (24), யோகேஷ்குமார் (24), சந்தோஷ் நகரல் (25) என்று தெரிய வந்தது.
இந்நிலையில் அவர்களில் இரண்டு பேர் தமிழர்கள் என தெரியவந்துள்ளது. கமலேஷின் சொந்த ஊர் சேலம் மாவட்டம், நங்கவள்ளி அருகே பெரிய வனவாசி மசக்காளியூர் பனங்காடு பகுதி. கமலேஷ் பி.ஏ. பொருளாதாரம் படித்துவிட்டு ராணுவத்தில் 4 ஆண்டுகளுக்கு முன்பு பணியில் சேர்ந்தார்.
திருமணம் ஆகாத நிலையில், பஞ்சாப்பில் உள்ள பதிண்டா பகுதியில் உள்ள ராணுவ முகாமில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் அவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல், உயிரிழந்த மற்றொரு வீரரான யோகேஷ் குமார் தேனி மாவட்டம் மூணாண்டிபட்டியை சேர்ந்தவர். அவருக்கு வயது 24. பஞ்சாப் துப்பாக்கிச்சூட்டில் இரண்டு தமிழர்கள் வீர மரணம் அடைந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in