1. Home
  2. தமிழ்நாடு

“இந்த நேரத்தில் வெளியே வராதீங்க…” – அமைச்சர் எச்சரிக்கை!!

“இந்த நேரத்தில் வெளியே வராதீங்க…” – அமைச்சர் எச்சரிக்கை!!

வெயில் அதிகரித்து வருவதால் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் டிஎம்எஸ் வளாகத்தில் கோடை வெயில் மற்றும் வெப்ப அலை பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்வது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.


“இந்த நேரத்தில் வெளியே வராதீங்க…” – அமைச்சர் எச்சரிக்கை!!


வெயில் காலங்களில், தேநீர், காபி, செயற்கை குளிர்பானங்கள், மதுபானங்கள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

பழச்சாறு அதிகம் பருக வேண்டும் என்று கேட்டுக் கொண்ட அமைச்சர், ரசாயனம் மூலம் வாழைப்பழம், மாம்பழம், தர்பூசணி ஆகியவை பழுக்கவைப்பது கண்டறியப்பட்டால், கடையின் உரிமம் ரத்து செய்யப்பட்டு, சீல் வைக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.


“இந்த நேரத்தில் வெளியே வராதீங்க…” – அமைச்சர் எச்சரிக்கை!!

ரசாயனம் மூலம் பழங்களை பழுக்க வைப்பதாக சந்தேகம் எழுந்தால் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என்றும், அவர்களது ரகசியம் காக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

newstm.in

Trending News

Latest News

You May Like