1. Home
  2. தமிழ்நாடு

கேபிள் ஒயரில் துணி காய வைத்த பெண் மரணம்!!

கேபிள் ஒயரில் துணி காய வைத்த பெண் மரணம்!!

கேபிள் ஒயரில் துணிகளை காயவைக்கும்போது மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பட்டரை பெரும்புதூர் பகுதியை சேர்ந்த நாகராஜ் (45) என்பவர் அந்த பகுதியில் கேபிள் டிவி ஆபரேட்டராக உள்ளார். அவர் மனைவி கீர்த்தனா (30) மற்றும் 3 மகள்களுடன் வசித்து வந்தார். இந்நிலையில் துணி துவைத்த கீர்த்தனா, அங்கிருந்த கேபிள் ஒயரில் காய வைத்துள்ளார்.

அப்போது அதில் இருந்த மின்சார கம்பி மூலம் கீர்த்தனா உடலில் மின்சாரம் பாயந்தது. இதில் அவர் சுருண்டு விழுந்தார். அவரது அலறல் சத்தத்தை கேட்டு அங்கு வந்தவர்கள் ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர்.


கேபிள் ஒயரில் துணி காய வைத்த பெண் மரணம்!!

பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் கீர்த்தனாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

நிகழ்விடத்திற்கு வந்த போலீஸார் விசாரணை நடத்தி, உடலை கூராய்வு செய்வதற்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுபோன்ற சம்பவங்களை தடுக்க விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், மக்கள் அறியாமை காரணமாக, தொடர்ந்து தவறு செய்து வருகின்றனர். மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like