இனி நடுத்தர மக்கள் தங்கம் வாங்குவது கஷ்டம் தான் போல..!!
தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடனேயே இருந்து வருகிறது. அதன்படி, கடந்த சனிக்கிழமை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.44, 480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து வாரத்தின் முதல் நாளான நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கம் 44,280 ரூபாய்க்கு விற்பனையானது. இந்த விலை சரிவு இல்லத்தரசிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இன்று அதிரடியாக ஏற்றம் கண்டிருக்கிறது.
அதன்படி, சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து விற்பனை ஆன நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 65 ரூபாய் உயர்ந்து, ரூ.5,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்து, ரூ.44,800-க்கு விற்பனையாகிறது.
அதேபோல், நேற்று 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.4,534-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (18 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 53 ரூபாய் உயர்ந்து, ரூ.4,587-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 77,100 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 700 ரூபாய் உயர்ந்து, ரூ.77,800-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.77.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
.png)