1. Home
  2. தமிழ்நாடு

ஓபிஎஸ் தரப்பு கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்!!


அதிமுக மேல்முறையீட்டு வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்தாண்டு ஜூலை மாதம் நடந்த அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையும், அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கும் தடை கோரியும், ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர்.

வழக்குகளை விசாரித்த நீதிபதி குமரேஷ் பாபு, அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என உத்தரவிட்டிருந்தார். தனி நீதிபதியின் இந்த தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் உட்பட 4 பேரும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.


ஓபிஎஸ் தரப்பு கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்!!


இந்த மனுக்கள் மார்ச் 31ம் தேதியன்று, நீதிபதிகள் மகாதேவன், முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்ற தனி நீதிபதி தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் நேரடியாக இறுதி விசாரணைக்கு தயார் என இரு தரப்பும் பதில் அளித்தன.

வழக்கின் விசாரணை இன்று மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போழுது அதிமுக பொதுக்குழு, பொதுச்செயலாளர் தேர்தல்களுக்கு எதிரான தடை விதிக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு வாதம் செய்தது.


ஓபிஎஸ் தரப்பு கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்!!


அதற்கு நீதிமன்றம் அதிமுக பொதுக்குழு, பொதுச்செயலாளர் தேர்தல்களுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என ஓபிஎஸ் தரப்பினரின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது.

மேலும், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல், பொதுக்குழு தீர்மானத்திற்கு எதிரான வழக்கில் இறுதி விசாரணை ஏப்ரல் 20-ம் தேதி நடைபெறும் என நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like