தங்கம் வாங்க இது சரியான நேரம்!!
தங்கம் விலையில் கடந்த 2 நாட்களாக எந்த மாற்றமும் இல்லாத நிலையில், இன்று அதிரடியாக சரிந்துள்ளது.
தங்கம் விலையானது ஏற்ற, இறக்கமாகவே இருந்து வரும் நிலையில், சிறந்து முதலீடு என்பதால் மக்கள் தங்கம் வாங்கி குவிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது.
22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.25 குறைந்து 5,535 ரூபாய் ஆகவும், சவரன் ஒன்றுக்கு ரூ.200 குறைந்து ரூ.44,280 ஆகவும் விற்பனையாகிறது. 18 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.20 குறைந்து 4,534 ரூபாய் ஆகவும், சவரன் ஒன்றுக்கு ரூ.160 வரை குறைந்து ரூ.36,272 ஆகவும் விற்பனையாகிறது.
ஒரு கிராம் வெள்ளி விலையும் கிராமுக்கு 60 காசுகள் குறைந்து ரூ.77.10 எனவும், கிலோ ஒன்றிற்கு ரூ.77,100 எனவும் விற்பனையாகிறது. ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவை நோக்கி செல்கிறது.
newstm.in