1. Home
  2. தமிழ்நாடு

ஓடும் ரயிலில் பயணிகள் மீது தீ வைத்த நபர் கைது!!

ஓடும் ரயிலில் பயணிகள் மீது தீ வைத்த நபர் கைது!!

கேரளாவில் ஓடும் ரயிலில் பெண் உட்பட பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்க முயன்ற நபரை போலீஸார் கைது செய்தனர்.

ஆலப்புழா - கண்ணூர் விரைவு ரயில் கோழிக்கோடு மாவட்டம் எலத்தூர் ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது, பயணிகள் மீது இரண்டு பாட்டில் பெட்ரோல் ஊற்றி மர்மநபர் ஒருவர் தீ வைத்தார்.

இதனை பார்த்த ரயில் பயணிகள், அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர். அந்த நபர் ரயிலில் இருந்து வெளியே குதித்து தப்பி ஓடியதாக பயணிகள் தெரிவித்தனர்.


ஓடும் ரயிலில் பயணிகள் மீது தீ வைத்த நபர் கைது!!


இதுகுறித்து ரயில்வே போலீசார் மற்றும் எலத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் தீக்காயம் அடைந்த பயணிகளை கோழிக்கோடு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் தலைமறைவான மர்ம நபரை தேடி வந்தனர். இந்நிலையில், முஹம்மது ஷஹரூக் சைபி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கட்டுமான தொழிலாளி என தெரியவந்துள்ளது.


ஓடும் ரயிலில் பயணிகள் மீது தீ வைத்த நபர் கைது!!


இவர் குற்றவாளி என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார் என்று போலிசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like