1. Home
  2. தமிழ்நாடு

குடிபோதையில் நண்பரின் ஆணுறுப்பை வெட்டி வீசிய கொடூரம்!!

குடிபோதையில் நண்பரின் ஆணுறுப்பை வெட்டி வீசிய கொடூரம்!!

குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் நண்பரின் ஆணுறுப்பை வெட்டி வீசிய நபரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஒடிசா மாநிலம் கேந்தரபாரா மாவட்டம் பென்தா என்ற பகுதியை சேர்ந்த பகவத் தாஸ் (30) என்பவரின் வீட்டிற்கு அவரது நண்பர் அக்சய் ராவத் (32) என்பவர் அங்கு வந்துள்ளார். பின்னர் இருவரும் கடற்கரைக்கு சென்று மது அருந்தியுள்ளனர்.

அப்போது இருவரும் பேசிக் கொண்டிருந்த போது திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அது தகராறாக மாறவே, பகவத் தாஸ்சின் ஆணுறுப்பை, அக்சய் கூரிய ஆயுதத்தால் அறுத்து எறிந்தார்.


குடிபோதையில் நண்பரின் ஆணுறுப்பை வெட்டி வீசிய கொடூரம்!!

அதைத் தொடர்ந்து அக்சய் ஆட்டோவில் தப்பிச் சென்றார். தகவல் அறிந்த பகவத் வீட்டார் கடற்கரைக்கு வந்து அவரை மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு உடல்நிலை மோசம் அடைந்தது.

தொடர்ந்து கட்டக் நகரில் உள்ள மருத்துவமனையில் உயர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையிடம் புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில், கொலை முயற்சி பிரிவின் கீழ் சஞ்சய் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகிறது.


குடிபோதையில் நண்பரின் ஆணுறுப்பை வெட்டி வீசிய கொடூரம்!!

அவர் தப்பி சென்ற ஆட்டோ ஓட்டுநரை கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள நபரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like