1. Home
  2. தமிழ்நாடு

சகோதரன் கள்ளத்தொடர்பால் ஐடி ஊழியர் காரோடு எரித்துக் கொலை..!!

சகோதரன் கள்ளத்தொடர்பால் ஐடி ஊழியர் காரோடு எரித்துக் கொலை..!!

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பிராமனபள்ளி பகுதியை சேர்ந்தவர் நாகராஜூ (35). ஐடி ஊழியரான இவர் தற்போது ‘ஒர்க் பிரம் ஹோம்’ முறையில் வீட்டில் இருந்து பணியாற்றி வருகிறார். இதனிடையே, நாகராஜூவுக்கு புருஷோதமன் என்ற சகோதரன் (தம்பி) உள்ளார். புருஷோதமனுக்கும் அதேகிராமத்தை சேர்ந்த ரிபிஜெயா என்பவரின் மனைவிக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.

இந்த கள்ளத்தொடர்பு குறித்து அறிந்த ரிபிஜெயா தன் மனைவியுடனான கள்ளத்தொடர்பை முறித்துக்கொள்ளும்படி புருஷோதமனிடம் கூறியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக ரிபிஜெயாவுக்கும் புருஷோதமனுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்துள்ளது. அதேவேளை, பெங்களூருவில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை கிடைத்ததால் புருஷோதமன் கடந்த சனிக்கிழமை இரவு பெங்களூரு சென்றுள்ளார்.

இந்த நிலையில், தனது சகோதரன் புருஷோதமனின் கள்ளத்தொடர்பு விவகாரம் தொடர்பாக அந்த பெண்ணின் கணவர் ரிபிஜெயாவுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்த நாகராஜூ முயன்றுள்ளார். இதற்காக கோபிநாத் என்பவர் மூலம் சமாதன பேச்சுவார்த்தைக்கு முயன்றுள்ளார்.


சகோதரன் கள்ளத்தொடர்பால் ஐடி ஊழியர் காரோடு எரித்துக் கொலை..!!

அதன்படி, சகோதரனின் கள்ளத்தொடர்பு விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வரும்படி சனிக்கிழமை இரவு நாகராஜூவை கோபிநாத் அழைத்துள்ளார். இதையடுத்து, நாகராஜூ தனது காரில் கோபிநாத், ரிபிஜெயா, சாணக்யபிரதாப் ஆகிய 3 பேரை ஏற்றிக்கொண்டு பம்பராஜுபள்ளி பகுதியில் உள்ள வனப்பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு வைத்து சகோதரனின் கள்ளத்தொடர்பு விவகாரம் குறித்து நாகராஜூ சமாதானம் பேசியுள்ளார்.

அப்போது, ரிபிஜெயாவுக்கும் நாகராஜூவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆனால், கோபிநாத்திடம் இந்த விவகாரத்தில் சமாதானமாக சென்றுவிடலாம் என்று நாகராஜூ கோரியபோதும் வாக்குவாதம் முற்றியுள்ளது. அப்போது, ஆத்திரமடைந்த ரிபிஜெயா, சாணக்யபிரதாபுடன் சேர்ந்து நாகராஜூவை காரோடு வைத்து தீ வைத்து எரித்துள்ளார். இதற்கு கோபிநாத்தும் உடந்தையாக இருந்துள்ளது.

இந்த சம்பவத்தில் காருக்குள் சிக்கிய நாகராஜூ சம்பவ இடத்திலேயே உடல் கருதி உயிரிழந்தார். நாகராஜூவை தீ வைத்து எரித்துக்கொலை செய்த ரிபிஜெயா உள்பட 3 பேரும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். வனப்பகுதியில் கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் தொடர்பாக மறுநாள் காலை தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், காரில் உடல் கருகிய நிலையில் இருந்த நாகராஜூவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், சகோதரனின் கள்ளத்தொடர்பு குறித்து சமாதானம் பேச சென்ற ஐடி ஊழியரை காருடன் எரித்துக்கொன்று தப்பியோடிய 3 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending News

Latest News

You May Like