1. Home
  2. தமிழ்நாடு

அதிர்ச்சி! பானிபூரி சாப்பிட்ட பெண் மரணம்!!

அதிர்ச்சி! பானிபூரி சாப்பிட்ட பெண் மரணம்!!

சென்னையில் பானி பூரி சாப்பிட்ட பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இப்போதைய காலகட்டத்தில் உணவுப்பழக்க வழக்கம் முற்றிலும் மாறிவிட்டது. இந்தக்காலத்து இளைஞர்கள் நொறுக்குத்தீனி அதிகம் சாப்பிடுவதை விரும்புகின்றனர். ஆனால் அதில் போதுமான ஊட்டச்சத்து கிடைக்காது.

அதே போல் சமீபகாலமாக இளைஞர்கள் திடீரென உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. நடனமாடும் போது மயங்கி விழுந்து இளைஞர்கள் உயிரிழப்பதை பார்த்து வருகிறோம்.


அதிர்ச்சி! பானிபூரி சாப்பிட்ட பெண் மரணம்!!


இந்நிலையில் சென்னையில் பானி பூரி சாப்பிட்ட பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மோனிஷா (24) என்ற பெண் மெரினா கடற்கரையில் பானிபூரி வாங்கி சாப்பிட்டுள்ளார்.

அதைத்தொடர்ந்து பறக்கும் ரயிலை பிடிக்க படிக்கட்டுகளில் வேகமாக ஏறிச் சென்றுள்ளார். அப்போது அவருக்கு ரயில் நிலையத்தில் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அவர் திடீரென சரிந்து கீழே விழுந்தார்.


அதிர்ச்சி! பானிபூரி சாப்பிட்ட பெண் மரணம்!!


இதையடுத்து அவரை உடனடியாக மருத்துமனைக்கு அழைத்துச் சென்றனர். அனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுபோன்ற உயிரிழப்புகள் சமீபகாலமாக அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

newstm.in

Trending News

Latest News

You May Like