கடும் எதிர்ப்புக்கு மத்தியில் பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு!!
பட்ஜெட்டில் அறிவித்தபடி கேரளாவில் பெட்ரோல், டீசல் விலை 2 ரூபாய் உயர்ந்துள்ளது.
கடந்த மாதம் கேரளாவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போது பெட்ரோல், டீசல் லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இது தவிர ஏப்ரல் 1 முதல் பத்திரப்பதிவு கட்டணம், மருந்துகள் விலை உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
விலை உயர்வு அறிவிப்புக்கு காங்கிரஸ், பா.ஜ.க., முஸ்லிம் லீக் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கேரளா முழுவதும் பல்வேறு போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன. ஆனாலும் விலை உயர்வை வாபஸ் பெற அரசு மறுத்து விட்டது.
இந்தநிலையில் பலத்த எதிர்ப்புக்கு இடையே இன்று முதல் பெட்ரோல், டீசல் விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது. தற்போது கேரளாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் அதிகரித்து ரூ.109.98க்கு விற்பனை செய்யப்படுகிறத. கேரளாவை விட பெட்ரோல், டீசல் விலை தமிழ்நாட்டில் குறைவு.
இதனால் தமிழ்நாடு எல்லையில் வந்து கேரள வாகன ஓட்டிகள் பெட்ரோல், டீசலை நிரப்பிச் செல்கின்றனர். வரும் நாட்களில் இது அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
newstm.in