இன்று முதல் வருமான வரி விதிப்பில் முக்கிய மாற்றம்..!!
பட்ஜெட்டில் புதிய நிதியாண்டுக்கான வருமான வரி சார்ந்த பல்வேறு புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டன. இந்த வருமான வரி விதிமுறைகள் இன்று ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
புதிய வருமான வரி முறையில் வருமான வரி உச்சவரம்பு 7 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, புதிய வருமான வரி முறையை தேர்வு செய்வோர், ஆண்டுக்கு 7 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டினால் அவர்கள் வருமான வரி செலுத்த தேவையில்லை.
புதிய வருமான வரி முறையில் வரி விகிதங்கள் திருத்தப்பட்டுள்ளன. புதிய விகிதங்கள் பின்வருமாறு,
3 லட்சம் ரூபாய் வரை : 0%
3 லட்சம் - 6 லட்சம் ரூபாய் : 5%
6 லட்சம் - 9 லட்சம் ரூபாய் : 10%
9 லட்சம் - 12 லட்சம் ரூபாய் : 15%
12 லட்சம் - 15 லட்சம் ரூபாய் : 20%
15 லட்சம் ரூபாய் வரை : 30%
சம்பளதாரர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு புதிய வருமான வரி முறையில் 50,000 ரூபாய் நிலையான விலக்கு (Standard deduction) வழங்கப்படும். குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 15000 ரூபாய் நிலையான விலக்கு வழங்கப்படும்.
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளில் கிடைக்கும் வெற்றி தொகைக்கு 30% டிடிஎஸ் (TDS) வரி விதிக்கப்படும்.
ஆயுள் காப்பீட்டு பாலிசிதாரர்கள் ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய்க்கு மேல் பிரீமியம் செலுத்தினால், முதிர்வு தொகைக்கு (Maturity) வரி விதிக்கப்படும். இந்த விதிமுறை 2023 ஏப்ரல் 1ஆம் தேதிக்கு பின் வாங்கப்படும் ஆயுள் காப்பீடு பாலிசிகளுக்கு மட்டுமே பொருந்தும்.