1. Home
  2. தமிழ்நாடு

இன்று முதல் அதிகரிக்கும் குறையும் பொருட்கள்.. முழு லிஸ்ட் ஒர் பார்வை..!

இன்று முதல் அதிகரிக்கும் குறையும் பொருட்கள்.. முழு லிஸ்ட் ஒர் பார்வை..!

2023-24ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் பல்வேறு பொருட்களுக்கு வரி திருத்தம் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இதன் மூலம் சில குறிப்பிட்ட பொருட்கள் ஏப்ரல் 1 முதல் விலை உயர்ந்தாலும், சில பொருட்களின் விலை மலிவாகவும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இன்று முதல் மலிவாகவும், விலை உயர்வு பெறும் பொருட்களைப் பற்றி இனி காண்போம்.

விலை உயரப்போகும் பொருட்கள்

தங்க நகைகள்

சிகரெட்

வெள்ளி பாத்திரங்கள்

பிளாட்டினம்

கிட்சனில் பயன்படுத்தப்படும் எலக்ட்ரிக் சிம்னி

வைட்டமின்கள்

உயர் ரக எலெக்ட்ரானிக்ஸ்

பிளாஸ்டிக் பொருட்கள்

சைக்கிள்கள் மற்றும் எலக்ட்ரானிக் வாகனங்கள்

மேலும் குறிப்பிட்ட சிகரெட்டுகளுக்கான சுங்க வரி 16 சதவீதம் அதிகரிக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

விலை குறையும் பொருட்கள்:

ஏப்ரல் 1 முதல், தொலைக்காட்சியின் விலைகள் சற்று குறையும், ஏனெனில் ஓப்பன் செல் TV பேனல்களின் பகுதிகளுக்கான சுங்க வரி தற்போதுள்ள 5% இலிருந்து 2.5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்கள், தொலைக்காட்சிகள், லித்தியம் அயன் பேட்டரிகள், இந்தியாவில் தயாரிக்கப்படும் எலக்ட்ரானிக்ஸ் வாகனங்கள், கேமரா லென்ஸ்கள், பொம்மைகள் மற்றும் இந்தியாவில் தயாரிக்கப்படும் சைக்கிள்கள் மற்றும் ஆய்வகத்தில் வளர்க்கப்படும் வைர விதைகள் ஆகியவற்றின் விலையும் முந்தைய ஆண்டை விட குறைவாக இருக்கும்.

இது தவிர, மொபைல் போன், கேமரா லென்ஸ், ஆடைகள், பெருங்காயம், கோக்கோ பீன்ஸ், உறையவைக்கப்பட்ட மட்டிகள், உறையவைக்கப்பட்ட கணவாய் மீன்கள், வெட்டப்பட்ட மற்றும் பொலிவூட்டப்பட்ட வைரங்கள், அசிட்டிக் ஆசிட், பெட்ரோலிய பொருட்களுக்கு பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் ஆகிய பொருட்களுக்கு இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளது.


Trending News

Latest News

You May Like