பாஜக ஒரு கட்சியே கிடையாது – உதயநிதி அதிரடி!!
தமிழ்நாட்டில் பாஜக ஒரு கட்சியே கிடையாது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளையொட்டி திமுக மேற்கு மாவட்டம் சார்பில் சென்னை நுங்கம்பாக்கம் விளையாட்டுத் திடலில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி மற்றும் எம்.பி. தயாநிதி மாறன் ஆகியோர் திமுக மூத்த முன்னோடிகள் 700 பேருக்கு பொற்கிழி வழங்கினர்.
தொடர்ந்து மேடையில் உரையாற்றிய அமைச்சர் உதயநிதி, திமுக இளைஞரணி சார்பில் கடந்த 2 மாதமாக 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், பிரதமர் மோடி அதானிக்கு ரயில் நிலையம், விமான நிலையம் என அனைத்தும் வழங்கி விட்டார், இன்னும் அவர் நாடாளுமன்றம், சட்டமன்றம் ஆகியவை மட்டும் தான் வழங்கவில்லை என்று விமர்சித்தார்.
மேலும், தமிழ்நாட்டில் பாஜக ஒரு கட்சியே கிடையாது என்றும், ஆடியோ வீடியோ கட்சியாக தான் உள்ளது என்றும் அமைச்சர் உதயநிதி கூறினார். தொடர்ந்து திமுக எம்பி தயாநிதி மாறன் உரையாற்றினார்.
அவர், ஆட்சிக்கு வந்த எட்டே மதத்தில் இந்தியாவில் சிறந்த முதலமைச்சர் என பெயர் பெற்றார் முதல்வர் ஸ்டாலின் என்று கூறினார். கொரோனா தடுப்பூசி போடுவதை ஒரு இயக்கமாக நடத்தி தமிழக மக்களின் உயிரை காப்பாற்றியவர் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், இதுவரை எதிர்க்கட்சிகள் தான் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு பார்த்திருப்போம், ஆனால் இப்போது ஆளும் கட்சி அமளியில் ஈடுபடுகிறது என்று விமர்சித்தார்.
newstm.in