1. Home
  2. தமிழ்நாடு

கெத்துதான்… முதலமைச்சர் காரையே சோதனையிட்ட போலீஸ்!!

கெத்துதான்… முதலமைச்சர் காரையே சோதனையிட்ட போலீஸ்!!

கோவிலுக்குச் சென்ற கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மையின் காரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கர்நாடகாவில் அண்மையில் சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு வெளியானது. இதனையடுத்து அங்கு தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளது. கர்நாடக மாநிலத்தில் வரும் மே 10ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்தப்படுகிறது. மே 13ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

இந்தநிலையில் மாநிலம் முழுவதும் போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில், கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை காரை சோதனையிட்டுள்ளனர்.


கெத்துதான்… முதலமைச்சர் காரையே சோதனையிட்ட போலீஸ்!!

அவர் சிக்கபல்லாபுரா மாவட்டத்தில் உள்ள கோயிலுக்குச் சென்றபோது காரை தடுத்து நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர். வாகனத்தை அதிகாரிகள் சோதனை செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், பசவராஜ் பொம்மை ஏற்கனவே தனது அரசு காரை ஒப்படைத்துவிட்டார். இதனால் பசவராஜ் பொம்மை தனது சொந்த காரில் கோவிலுக்குச் சென்றார்.

அவரது காரில் ஆட்சேபனைக்குரிய பொருட்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என்பதால் அதிகாரிகள் வாகனத்தைச் செல்ல அனுமதித்தனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like