1. Home
  2. தமிழ்நாடு

பிரபல சீரியல் நடிகைக்கு வளைகாப்பு..!! குவியும் வாழ்த்துக்கள்

பிரபல சீரியல் நடிகைக்கு வளைகாப்பு..!! குவியும் வாழ்த்துக்கள்

2016-ல் வெளியான ‘2கிடாரி பூசாரி மகுடி’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நக்‌ஷத்ரா, பின்பு சீரியல் பக்கம் திரும்பினார். ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வந்த யாரடி நீ மோகினி தொடர் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.அதன் பின்னர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாக தொடங்கிய வள்ளித் திருமணம் சீரியலில் நடிக்கத் தொடங்கினார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு தன்னுடைய நீண்ட நாள் காதலரான விஷ்வா என்பவரை நக்‌ஷத்ரா மிகவும் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டார்.

பிரபல சீரியல் நடிகைக்கு வளைகாப்பு..!! குவியும் வாழ்த்துக்கள்

சீரியல் கடந்த டிசம்பர் மாதம் முடிந்த நிலையில், தற்போது 5 மாத கர்ப்பமாக இருந்த நட்சத்திராவிற்கு வளைகாப்பு நிகழ்வு நடைபெற்றுள்ளது.

நக்‌ஷத்ராவுக்கு 5 மாத சீர் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த நிலையில், மிகவும் எளிமையான முறையில் அந்த நிகழ்ச்சி நடந்து முடிந்துள்ளது. தற்போது இது குறித்த வீடியோக்களை நக்‌ஷத்ரா, தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.


Trending News

Latest News

You May Like