தயிர் ஹிந்தி சர்ச்சை… பணிந்தது மத்திய அரசு!!
தயிர் பாக்கெட்டில் ‛தஹி' என்னும் ஹிந்தி வார்த்தையை பயன்படுத்த உத்தரவிட்ட இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் அதனை வாபஸ் பெற்றுள்ளது.
எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ (FSSAI) எனப்படும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் என்ற அமைப்பு உணவு பொருட்களின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஏற்படுத்தப்பட்டது.
உணவு பொருட்களை பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்யும் நிறுவனங்கள் இந்த அமைப்பிடம் ஒப்புதல் பெற வேண்டும். இந்த நிலையில் தமிழகத்தில் ஆவின், கர்நாடகாவில் நந்தினி, கேரளாவில் மில்மா ஆகிய பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பிற்கு இந்த அமைப்பு கடிதம் அனுப்பியது.
அதில், தயிர் பாக்கெட்களில் ‛தஹி' என்ற ஹிந்தி சொல்லை பயன்படுத்த வேண்டும் என கூறியிருந்தது. இதற்கு தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்களின் உணர்வுகளை மதியுங்கள்! ஹிந்தி திணிப்பை நிறுத்துங்கள் என்றார்.
குழந்தையைக் கிள்ளிவிட்டு சீண்டிப் பார்க்கும் நயவஞ்சக எண்ணம் யாருக்கும் வேண்டாம்! தொட்டிலை ஆட்டும் முன்னர் தொலைந்து விடுவீர்கள்!' என எச்சரிக்கை விடுத்திருந்தார்.
கர்நாடகா உள்ளிட்ட பலதரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியதால், தயிரில் ‛தஹி' என்ற வார்த்தை கட்டாயமில்லை என இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் தெரிவித்துள்ளது.
newstm.in