1. Home
  2. தமிழ்நாடு

உதவி இயக்குனர்களை விட்டுக்கொடுக்காத வெற்றிமாறன்…!

உதவி இயக்குனர்களை விட்டுக்கொடுக்காத வெற்றிமாறன்…!

வெற்றிமாறன் தற்போது நடிகர் சூரியை கதாநாயகனாக வைத்து இயக்கியுள்ள படம் ‘விடுதலை‘. இப்படம் நாளை மார்ச் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதையடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் ரிலீஸாக உள்ளது. அதன்பின் சூர்யாவின் ‘வாடிவாசல்‘, தனுஷின் ‘வடசென்னை 2‘ ஆகிய படங்கள் வரிசையில் உள்ளது.

இந்நிலையில் வெற்றிமாறன் தன் உதவி இயக்குனர்கள் 25 நபர்களுக்கு செங்கல்பட்டு மாவட்டம் உத்திரமேரூர் அருகே ஒவ்வொருவருக்கும் ஒரு கிரவுண்ட் நிலம் வாங்கி கொடுத்துள்ளாராம். இந்த இடத்தில் வீடு கட்டிக் கொள்ளவோ, அல்லது சிறு அளவில் விவசாயமோ செய்ய சொல்லி உள்ளார்.

அதேசமயம் எக்காரணத்தை கொண்டும் அந்த இடத்தை விற்க கூடாது என கண்டிப்பான முறையில் கூறி உள்ளார் இயக்குனர் வெற்றிமாறன். இந்நிலையில் தற்போது இதுகுறித்து செய்திகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் இச்செயலுக்காக ரசிகர்கள் பலரும் இவரை பாராட்டி வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like