1. Home
  2. தமிழ்நாடு

கோவையில் தனியாக இருந்த பெண் கழுத்து அறுக்கப்பட்டு கொலை..!!

கோவையில் தனியாக இருந்த பெண் கழுத்து அறுக்கப்பட்டு கொலை..!!

கோவை மாவட்டம் அன்னூர் ஊராட்சி ஒன்றியம் அன்னூர் மேட்டுப்பாளையம் ஊராட்சி கரையம்பாளையம்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (61). இவரது மனைவி தங்கமணி (54). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். அவர்கள் திருமணம் முடிந்து தங்களின் குடும்பத்தினருடன் தனியாக வசித்து வருகின்றனர்.

இதனால் சுப்பிரமணியும், தங்கமணி யும் தனியாக வசித்து வந்தனர். இந்த நிலையில், சுப்பிரமணி நேற்று காலை சொந்த வேலையாக வெளியே சென்று விட்டு மாலையில் வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது வீடு திறந்து கிடந்தது. இதனால் அவர் சமையல் அறைக்கு சென்று பார்த்த போது தங்கமணி கழுத்து அறுபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

கோவையில் தனியாக இருந்த பெண் கழுத்து அறுக்கப்பட்டு கொலை..!!

இதைக் கண்டு அதிர்ச்சி சுப்பிரமணி கதறி துடித்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் மற்றும் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். இதில் தங்கமணியின் குடும்பத்தார், உறவினர்கள் மற்றும் அருகில் வசிப்பவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டனர். போலீசார் கொண்டு வந்திருந்த மோப்பநாய் சுமார் ஒரு கிலோ மீட்டர் வரை சென்று திரும்பியது. பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், தங்கமணி கொலை செய்யப்பட்ட வீட்டில் இருந்து பணம், நகை எதுவும் கொள்ளை போக வில்லை. இதனால் இந்த கொலை எதற்காக நடைபெற்றது. கொலை செய்தவர்கள் யார்?. நகை, பணம் கொள்ளை அடிக்கப் படாதது போலீசாரின் கவனத்தை திசை திருப்பும் முயற்சியா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like