1. Home
  2. தமிழ்நாடு

கோக், பெப்சி குடித்தால் பாலியல் ஆர்வம் அதிகரிக்கும்!?

கோக், பெப்சி குடித்தால் பாலியல் ஆர்வம் அதிகரிக்கும்!?

கோக், பெப்சி குடித்தால் ஆண்களுக்கு பாலியல் ஆர்வம் அதிகரிக்கும் என்று சீனாவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

சீனாவில் மின்ஸு பல்கலைக்கழகத்தில், கார்பனேடட் குளிர்பானங்களால் கருத்தரித்தல் திறன் பாதிக்கப்படுகிறதா என்று ஆய்வு நடத்தப்பட்டது. அதில், ஆண்களின் விதைப்பை வளர்ச்சி மேம்படுவதுடன், பொதுவான பாலியல் ஆரோக்கியமும் மேம்படுகிறது என்று தெரியவந்தது.

இதற்கு முன்பு உலக அளவில் நடத்தப்பட்ட பல ஆய்வுகளில், சோடா பானங்களை அருந்தினால் ஆண்களின் இனப்பெருக்க நலன் பாதிக்கப்படும் என்றும், விந்தணுக்களின் தரம் வெகுவாகப் பாதிக்கப்படும் என்றும் கூறப்பட்டது.


கோக், பெப்சி குடித்தால் பாலியல் ஆர்வம் அதிகரிக்கும்!?


ஆனால், இப்போது விளைவுகள் தலைகீழாக இருக்கின்றன அதாவது முந்தைய ஆய்வு முடிவுகளுக்கு நேர்மாறானதாக இது அமைந்துள்ளது. சீன ஆய்வாளர்கள் ஆண் எலிகளை பரிசோதனைக்கு உட்படுத்தினர்.

முதலாவது குழுவினருக்கு கோக கோலா, பெப்ஸி போன்ற பானங்களும், இன்னொரு குழுவுக்கு வெறும் தண்ணீரும் அருந்துவதற்கு கொடுக்கப்பட்டது. 15 நாட்களுக்கு பிறகு கொக்க கோலா மற்றும் பெப்ஸி அருந்திய எலிகளின் பாலியல் ஆர்வம் மேம்பட்டிருப்பது தெரியவந்தது.


கோக், பெப்சி குடித்தால் பாலியல் ஆர்வம் அதிகரிக்கும்!?


இந்த ஆய்வை விரிவாக்கம் செய்வதன் மூலமாக விதைப்பை தொடர்புடைய நோய்களுக்கு தீர்வு காண முடியும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் இதனை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியது அவசியம் என்று மற்றொரு தரப்பு விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like