1. Home
  2. தமிழ்நாடு

“என் சமாதியில் கோபாலபுரத்து விசுவாசி என்று எழுதினால் போதும்!!”

“என் சமாதியில் கோபாலபுரத்து விசுவாசி என்று எழுதினால் போதும்!!”

எனது சமாதியில் கோபாலபுரத்து விசுவாசி இங்கு உறங்குகிறான் என்று எழுதவேண்டுமென சட்டப்பேரவையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உருக்கமாக பேசியுள்ளார்.

பேரவையில் மானியக்கோரிக்கை விவாதத்திற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் துரைமுருகன், மூத்த நிர்வாகி என்ற முறையில் கலைஞர் என்ன துறை வேண்டும் என்று தன்னிடம் கேட்டபோது, விவசாயிகளுக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்று நீர்வளத்துறை கேட்டதாக கூறினார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் துரைமுருகன், ஒரு பைசா மின்கட்டண உயர்வை கண்டித்து பெருமாநல்லூரில் போராட்டம் நடந்த நிலையில், கலைஞர் இனி ஒரு பைசா கூட விவசாயிகள் மின்கட்டணம் செலுத்தவேண்டியதில்லை என்று கூறியதை நினைவுகூர்ந்து கலைஞருக்கு நன்றி தெரிவித்தார்.



எல்லோருக்கும் மறைவு வரும், அப்படி தான் மறையும் போது சமாதியில் கோபாலபுரத்து விசுவாசி இங்கு உறங்குகிறான் என்று எழுதவேண்டும், அது போதும் என்று அமைச்சர் துரைமுருகன் உருக்கமாக தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, நீங்கள் நூறு வருடம் வாழவேண்டும் என்றார்.

மூத்த உறுப்பினர் என்ற முறையில் எதிர்கட்சி உறுப்பினர்களும் மரியாதை தருகின்றனர் என்றும், அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

newstm.in

Trending News

Latest News

You May Like