மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!!
தயிர் பாக்கெட்களின் மீது தஹி என்ற இந்திச் சொல்லை குறிப்பிட வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு தொடர்ந்து தமிழ்நாட்டில் இந்தியை திணிப்பதற்கான வேலையை செய்து வருகிறது. பல்வேறு வழிகளை பின்பற்றிய மத்திய அரசு தற்போது புதுமாதிரியாக தயிர் பாக்கெட்டை கையில் எடுத்துள்ளது.
தமிழ்நாட்டின் ஆவின் மற்றும் கர்நாடகாவின் நந்தினி தயிர் பாக்கெட்டுகளில் தமிழில் ‘தயிர்’ கன்னடத்தில் ‘மோசரு’ போன்ற வார்த்தைகளை தவிர்த்து அதற்கு பதிலாக “தஹி” என்ற இந்தி வார்த்தையை பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
அடைப்பு குறிக்குள் தமிழ் மற்றும் கன்னட வார்த்தைகளை பயன்படுத்தலாம் என்று மத்திய அரசின் உணவுப் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு தென்மாநிலங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அறிவிப்புக்கு சமூகவலைத்தளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த விதியை பின்பற்றாத பட்சத்தில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் ஆவின் மற்றும் நந்தினி அமைப்புகளின் உரிமைகளை ரத்து செய்யும் வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து கர்நாடக அரசின் நந்தினி நிறுவனம் சார்பில் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழ்நாடு அரசின் ஆவின் சார்பாகவும் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்திச் சொல்லை குறிப்பிட வேண்டும் என்ற மத்திய அரசின் நிறுவனமான FSSAI உத்தரவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
இது குறித்து அவர் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், “எங்கள் தாய்மொழியைத் தள்ளிவைக்கச் சொல்லும் #FSSAI, தாய்மொழி காக்கும் நாங்கள் சொல்வதைக் கேளுங்கள் என்றும் மக்களின் உணர்வுகளை மதியுங்கள்.
#StopHindiImposition என்றும் குழந்தையைக் கிள்ளிவிட்டுச் சீண்டிப் பார்க்கும் நயவஞ்சக எண்ணம் யாருக்கும் வேண்டாம்! தொட்டிலை ஆட்டும் முன்னர் தொலைந்துவிடுவீர்கள்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
newstm.in