1. Home
  2. தமிழ்நாடு

அம்பானி வீட்டில் வேலை செய்பவர்களுக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா…?

அம்பானி வீட்டில் வேலை செய்பவர்களுக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா…?

அம்பானி வீட்டில் கிட்டத்தட்ட 600 பேர் வேலை செய்கின்றனர். இப்போது அவர்களை வேலைக்கு எவ்வாறு தேர்வு செய்கிறார்கள், அவர்களின் கல்வி தகுதி என்ன என்பது போன்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. வீட்டு வேலைக்காரர்களாக இருந்தாலும் எல்லோரும் படித்தவர்கள் தெரியுமா?

உலகின் இரண்டாவது மிக விலையுயர்ந்த வீடான அம்பானியின் அன்டிலியா வீட்டில் 27 மாடிகள் உள்ளன. அங்கு வேலை செய்யும் 600 பணியாளர்களுக்கு அந்த வீட்டிலே தங்கும் இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொருவரின் ஆண்டு சம்பளமும் கிட்டத்தட்ட 24 லட்சம் ஆகும். இவ்வளவு சம்பளத்தை சும்மாவா தூக்கி கொடுப்பார்கள், இவர்களை வேலைக்கு எடுக்க பலகட்டமாக நேர்காணலும் எழுத்துத்தேர்வும் நடக்கும். அவர்களின் கல்வித்தகுதி எவ்வளவு இருக்கணும் தெரியுமா?

அம்பானி வீட்டில் வேலை செய்பவர்கள் கட்டாயமாக ஹோட்டல் மேனேஜ்மெண்ட் டிகிரி படித்திருக்க வேண்டும். அம்பானி வீட்டில் இரவு, பகல் என ஷிப்ட் கணக்கில் வேலை இருக்குமாம். சிலருக்கு 24×7 கூட வேலை பார்ப்பார்களாம். அது சரி பணக்காரர் வீட்டு வேலை என்றால் சும்மாவா?

Trending News

Latest News

You May Like