1. Home
  2. தமிழ்நாடு

‘சாகுந்தலம்‘ படத்தில் நடித்துள்ளாரா அல்லு அர்ஜுனின் மகள்..?

‘சாகுந்தலம்‘ படத்தில் நடித்துள்ளாரா அல்லு அர்ஜுனின் மகள்..?

நடிகை சமந்தா தற்போது கதையின் நாயகியாக நடித்துள்ள படம் ‘சாகுந்தலம்‘. இப்படத்தை இயக்குனர் குணசேகர் இயக்கியுள்ளார். இந்த படம் வரும் ஏப்ரல் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தில் நடிகர் அல்லு அர்ஜுனின் மகள் ஆரா, குட்டி இளவரசியாக நடித்துள்ளார்.

இந்நிலையில் சாகுந்தலம் படத்தில் ஆராவுடன் நடித்த அனுபவம் குறித்து சமந்தா கூறுகையில், “அல்லு அர்ஜுனின் மகள் தனது திறமையால் படப்பிடிப்பில் உள்ள அனைவரது மனதையும் கவர்ந்து விட்டார். அவர் புத்திகூர்மை மிக்கவர். அதோடு ஆங்கிலத்தில் பேசாமல் தெலுங்கில் மிகத் தெளிவாக பேசினார். அவருடன் நடித்த அனுபவம் மிக புதுமையாக இருந்தது.

‘சாகுந்தலம்‘ படத்தில் நடித்துள்ளாரா அல்லு அர்ஜுனின் மகள்..?

பல காட்சிகளில் தனது அசத்தலான நடிப்பால் என்னுடைய மனதை கொள்ளை அடித்துவிட்டார் ஆரா. இந்த ஆரா சூப்பர் ஸ்டாராவதற்காகவே பிறந்தவர். இவர் இந்த சாகுந்தலம் படத்தில் குட்டி இளவரசியாக நடித்திருக்கிறார் என்று நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like