1. Home
  2. தமிழ்நாடு

ஆந்திரா, தெலுங்கானா இரு மாநிலங்களுக்கு இடையே இரண்டாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்..!!

ஆந்திரா, தெலுங்கானா இரு மாநிலங்களுக்கு இடையே இரண்டாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்..!!

இந்திய ரயில்வே, ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய இரு மாநிலங்களுக்கு இடையே இரண்டாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை விரைவில் தொடங்க உள்ளது. செகந்திராபாத் மற்றும் விசாகப்பட்டினம் இடையே முதல் வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 15 ஆம் தேதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்நிலையில், உலகப் புகழ்பெற்ற கோயில் நகரமான திருப்பதி மற்றும் செகந்திராபாத்தை இணைக்கும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் ஏப்ரல் 8 முதல் தொடங்கப்பட உள்ளது. இந்த வந்தே பாரத் ரயில் வாரத்தில் ஆறு நாட்கள் திருப்பதி மற்றும் செகந்திராபாத் இடையே இயக்கப்படும்.

ரயில் செல்லும் புதிய பாதை, கட்டணம் போன்றவை தொடர்பான விவரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. தற்போது, நாடு முழுவதும் 10 வந்தே பாரத் ரயில்கள் உள்ளன. வரும் மாதங்களில் நாடு முழுவதும் மேலும் வந்தே பாரத் ரயில்களை தொடங்க ரயில்வே திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like